தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இ.ஐ.ஏ 2020 : தமிழில் வெளியிடுவது தொடர்பாக கால அவகாசம் கோரிய மத்திய அரசு! - MHC

சென்னை : இ.ஐ.ஏ வரைவறிக்கை தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது முடிவெடுக்கப்பட்ட பிறகே தமிழில் அறிக்கை வெளியிடப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இ.ஐ.ஏ 2020 : தமிழில் வெளியிடுவது தொடர்பாக கால அவகாசம் கோஉரிய மத்திய அரசு !
இ.ஐ.ஏ 2020 : தமிழில் வெளியிடுவது தொடர்பாக கால அவகாசம் கோஉரிய மத்திய அரசு !

By

Published : Sep 8, 2020, 6:45 PM IST

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 அறிக்கையை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ஏப்ரல் 11ஆம் தேதி அன்று மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டு அது தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்க கால அவகாசம் வழங்கியது.

இந்நிலையில், வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோருவது ஏற்புடையதல்ல. எனவே, வரைவறிக்கை மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டுமென மீனவர் தியாகராஜன் மற்றும் வழக்குரைஞர் ராம்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வுக்கு முன்பாக இன்று (செப்டம்பர் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர், "வரைவு அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு தயாராக உள்ளது. ஆனால், 22 மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டுமென்ற டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளதால், அதில் முடிவெடுக்கப்பட்ட பிறகே தமிழில் வெளியிடப்படும்" என தெரிவித்தார்.

அதை பதிவு செய்த நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றமும் வரைவு அறிக்கைக்கு செப்டம்பர் 23ஆம் தேதி வரை தடை விதித்துள்ளதாகக் கூறி, இந்த வழக்குகளை அக்டோபர் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details