தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி: மீண்டும் முழுவீச்சில் தொடங்கியது ராமர் கோயில் கட்டுமானம் - ஸ்ரீராம் ஜென்ம பூமி தீர்த ஷேத்திரா அறங்காவலர் குழு

லக்னோ: லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக முடங்கியிருந்த ராமர் கோயில் கட்டுமானம் அயோத்தியில் மீண்டும் வேகம்காட்டத் தொடங்கியுள்ளது.

Ram Temple
Ram Temple

By

Published : May 25, 2020, 5:40 PM IST

Updated : May 26, 2020, 1:10 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம்ஜென்ம பூமி விவகாரத்தில் பல ஆண்டுகளுக்கு பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை கடந்த நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வழிகாட்டுதலின்படி, ராமர் கோயில் அறங்காவல் குழு அமைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட கரோனா ஊரடங்கு காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன. பின்னர் கடந்த 11ஆம் தேதி ஸ்ரீ ராம்ஜென்ம பூமி தீர்த ஷேத்திரா அறங்காவலர் குழு, அயோத்தி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று தகுந்த இடைவெளியுடன் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டது.

இதையடுத்து, தற்போது அங்கு கோயில் கட்டுமானப் பணிகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. மேலும், அறங்காவல் குழு தலைவரான நிரித்ய கோபால் தாஸ் 28 ஆண்டுகளுக்கு பின் ராம்ஜென்ம பூமி பகுதிக்கு வந்து கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: 22 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்ற பெற்றோர் கைது!

Last Updated : May 26, 2020, 1:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details