மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சவுகானை விமர்சித்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான திக் விஜய் சிங் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோ மாநிலத்தின் கடந்த கால காங்கிரஸ் அரசை விமர்சித்து சிவ்ராஜ் சவுகான் பேசியதாகும். இந்நிலையில் வீடியோ திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக கூறி பாஜகவினர் போபால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 500 (அவதூறு), 501 (அச்சிட்டு அவதூறு பரப்புதல்), 502(2) (பொதுமக்களை தவறாக வழிநடத்துதல்) 465 (மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தப் புகார்கள் பதியப்பட்டுள்ள மறுதினமே திக்விஜய் சிங் இந்தியில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிவ்ராஜ் சிங் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் மற்றும் கமல்நாத் ஆகியோர் மீதும் இவ்வாறு வீடியோக்கள் வெளியிட்டு அவதூறு பரப்பியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிப்பேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு ஒத்திவைப்பு!