தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்பதிவுகள் ரத்து செய்யப்படுகின்றன: ஏர் இந்தியா - ஏர் இந்தியா முன்பதிவுகள் ரத்து

டெல்லி: மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து விமானங்களுக்குமான முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

AIR INDIA
AIR INDIA

By

Published : Apr 20, 2020, 12:44 AM IST

கரோனா பெருந்தொற்றினால், தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு, வரும் மே 3ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவை முறையே மே 4, ஜூன் 1ஆம் தேதிகளில் தொடங்கும் என்றும்; அதற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது.

இதனிடையே, மத்திய அரசு முடிவெடுக்கும் வரை விமானச் சேவைகளைத் தொடர வேண்டாம் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அண்மையில் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து விமானங்களுக்கான முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களின் பணம் திரும்பிச் செலுத்தப்படும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க : ஊரடங்கில் சுரங்கப்பாதை அமைத்த நக்சல்கள்

ABOUT THE AUTHOR

...view details