பிரதமர் மோடி ஃபிரான்ஸ் பியாரிட்ஸில் (Biarritz) கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அந்நாட்டு அதிபர் மேக்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடு தலைவர்களைச் சந்தித்தார்.
3 நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்த மோடி இந்தியா வருகை! - modi returns to india after 3 countries trip
டெல்லி: ஜி7 மாநாடு உட்பட மூன்று நாடுகளின் சுற்றுப்பயணைத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார்.

பின்னர் 23ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்ற மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் சயத் (Order of Zayed) வழங்கப்பட்டது. அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது-பின்-சையதை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில் மோடி ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து மோடி முதல்முறையாக பஹ்ரைனுக்கு சென்றபோது. அந்நாட்டு அரசர் சல்மான் கலீஃபாவால் கவுரவிக்கப்பட்டார். அத்துடன் மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியா திரும்பிய மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.