பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவிவருகிறது. அவ்வப்போது இரு நாட்டு ராணுவப் படைகளும் தாக்குதல் நடத்திக் கொள்வது வாடிக்கையாக உள்ளது. பாகிஸ்தான் தனது 2,500 கிமீ எல்லையைச் சுற்றி வேலி ஒன்றை 2017ஆம் ஆண்டு அமைக்க தொடங்கியது.
இதன் காரணமாக இரு தரப்பிற்கு இடையே மோதல் வெடிக்க தொடங்கியது. பயங்கரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க வேலி அவசியம் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருந்தது. இரு நாட்டின் பயங்கரவாதிகளும் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது