உத்தரப் பிரதேச மாநிலம்,அயோத்தியில் சீதா-ராமர் கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு நேற்று மாலை சீதா-ராமர் கோயிலில் இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், பல்வேறு சமூகத்தினர் சமபந்தியில் அமர்ந்து உணவு உண்டு தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
இது குறித்து அக்கோயிலின் அர்ச்சகரான யூகல் கிஷோர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "மூன்றாவது முறையாக இங்கு இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடுசெய்துள்ளோம். வரும் நாட்களில் இதனைத் தொடர்ந்து நடத்துவேன். எல்லா பண்டிகையையும் பேரானந்தத்தோடு கொண்டாட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள், காலை முதல் மாலை வரை உணவு, தண்ணீர் அருந்தாமல் நோன்பு மேற்கொள்வர். ஒவ்வொரு நாளும், சூரியன் உதிப்பதற்கு முன்பு சஹரியும் (காலை உணவு), மாலையில் சூரிய மறைவுக்குப் பிறகு இஃப்தாருடன் (மாலை உணவு) உண்டுதங்களது நோன்பை முடித்துக் கொள்வர்.