ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பிரபல இளம் வழக்கறிஞர் பாபர் காத்ரி, ஹவால் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாற்பது வயதே ஆன இளம் வழக்கறிஞரான பாபர், தொடர்ச்சியாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றும், செய்தித்தாள்களில் முக்கியக் கட்டுரைகளை எழுதி வருபவரும் ஆவார்.
இவரது கருத்துக்களும் செயல்பாடுகளும் பிரிவினைவாதிகளுக்கு பிடிக்காமல் இருந்து வந்த நிலையில், அவர் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்னதாக தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு புகார் ஒன்றை பாபர் அனுப்பியிருந்தார்.