குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில், ராட்சத ராட்டினத்தில் சுற்றுலாப் பயணிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ராட்டினம் முறிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
பொழுது போக்கு பூங்காவில் விபத்து: இருவர் பலி - Gujarat ride accident
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
பொழுது போக்கு பூங்காவில் விபத்து: இரண்டு பேர் உயிரிழப்பு!
இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராட்சத ராட்டினம் விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.