பாஜகவின் நாடாளுமன்றக் குழு கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தில் நடைபெற்று வருகிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், முதன் முதலாக 380 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று வலுவான நிலையில் பாஜக உள்ளது. இந்த கட்சியை வளர்த்து எடுப்பதில் முக்கிய பங்காற்றிய அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாததால் அவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பாஜக முன்னோடிகள் இல்லாத நாடாளுமன்றக் குழு கூட்டம்
டெல்லி: பாஜக மூத்த தலைவர்கள அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இல்லாத அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற குழு கூட்டம்
அவர்கள் இல்லாத நடைபெறும் முதல் நாடாளுமன்றக் குழு கூட்டம் இதுவாகும். மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்த பிறகு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரையும் ஒதுக்கிவிட்டதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அத்வானியின் பாரம்பரிய தொகுதியான காந்திநகர் தொகுதி பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.