பெரியவர்கள் தற்போது செய்யும் தவறுகளுக்கு அடுத்த தலைமுறை குழந்தைகள் அதிக விலை கொடுக்கப் போகிறார்கள். ஆம், அவர்கள் தாங்க முடியாத வெப்பநிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது அவர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். சமீபத்திய ஆய்வின்படி, உலகளவில் காலநிலை மாற்றம் காரணமாக ஒரு முழு தலைமுறை குழந்தைகள் பாதிக்கப்பட உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் குழந்தைகள் அதிக துன்பங்களைச் சந்திப்பார்கள்.
புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் உலக வெப்பநிலை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உணவு பற்றாக்குறை, தொற்றுநோய்கள், வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் உக்கிரம் அடையும். இந்த ஆய்வில் உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வங்கியுடன் இணைந்து நடத்தியது. இதில் 35 அமைப்புகளைச் சேர்ந்த 120 நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த அறிக்கைகள் புகழ்பெற்ற அறிவியல் இதழான, “தி லான்செட்”டில் வெளியாகின. காலநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி உலக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் ஆக குறைக்கப்பட வேண்டும்.இல்லாவிட்டால் வரும் தலைமுறையினர் கவனக்குறைவாக பாதிக்கப்படுவார்கள்.
தற்போதைய நிலவரப்படி இந்த பிரச்னை குழந்தைகளுக்கு காணப்படுகின்றது. கார்பன் உமிழ்வின் தற்போதைய சூழ்நிலை தொடர்ந்தால், தற்போதைய தலைமுறை குழந்தைகள் 71 வயதாகும் போது உலக வெப்பநிலையில் 4 டிகிரி செல்சியஸ் உயர்வைக் காண்பார்கள். வெப்பநிலை உயர்வு மற்றும் மழையின் வடிவத்தில் மாற்றம் டெங்கு போன்ற நோய்களின் பரவலான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும். இன்றைய நிலவரப்படி, உலக மக்கள் தொகையில் பாதி பேர் இந்த நோய் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.