புதுச்சேரி அரசு, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும், கைகளை நன்கு கழுவ வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி உப்பளம் தொகுதியில் தாவிதுபேட்டை, துப்ராயபேட்டை, உப்பளம் பகுதியில் அதிமுக சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கிருமி நாசினி தெளித்த சட்டப்பேரவை உறுப்பினர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் அப்பகுதியை தூய்மைப்படுத்தி கிருமி நாசினி தெளித்தார். பின்னர், வீடுவீடாகச் சென்று அப்பகுதி மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கினார்.
இதையும் படிங்க: வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு ஆட்சியர் ஆறுதல்