தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..! - eliminiting case

டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்றம்

By

Published : Jul 3, 2019, 7:34 AM IST

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதாக திமுக, தங்க தமிழ்செல்வன் சார்பில் முறையீடு செய்யப்பட்டது.

சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த வழக்கை விசாரித்து ஏ.கே சிக்ரி பணி ஓய்வு பெற்றதால், நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து 11எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை புதிய அமர்வு இன்று விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details