இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” புதுச்சேரி தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீடு பெறும் விவகாரத்தில், மாணவர்களின் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் பேரவையை கூட்டி அவசர சட்ட மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும். பேரவை கூடினால் அரசு கவிழ்ந்து விடும் என்ற பயமிருந்தால், அமைச்சரவையை கூட்டி அரசாணை பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடி உடனடியாக தலையிட வேண்டும்.
நாராயணசாமி பெறும் கையூட்டில் ஸ்டாலினுக்கும் பங்குண்டு!
புதுச்சேரி: முதலமைச்சர் நாராயணசாமிக்கு தனியார் மருத்துவக்கல்லூரிகள் தரும் கையூட்டில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் பங்குண்டு என புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மருத்துவக்கல்லூரிகளில் 50% இட ஒதுக்கீட்டை பெற்ற பின்னரே மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும். தனியார் மருத்துவக்கல்லூரிகள் ஆண்டிற்கு பல கோடி ரூபாயை ஆளுங்கட்சிக்கு கையூட்டாக தருகின்றன. இதில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் பங்குண்டு. அப்படி இல்லையெனில் தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்படும் முதலமைச்சர் நாராயணசாமிக்கான ஆதரவை அவர் வாபஸ் பெற வேண்டும் “ என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கண்ணுப்பட போகுதய்யா... கருங்காலி குச்சியுடன் சுற்றிவரும் பாஜக தலைவர்!