புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் சட்டப்பேரவை சபாநாயகர் சந்தித்து உரிமை மீறல் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில், ”புதுச்சேரி, ஏனாம் மண்டல நிர்வாகியாக செயல்படும் சிவராஜ் மீனா, துணைநிலை ஆளுநர் அவர்களோடு வாட்ஸ் அப் மூலம் சில கருத்துகளை பகிர்ந்தார். அதில் ஏனாம் மண்டல அரசு அலுவலர், புதுச்சேரியை சேர்ந்த ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் உணவுப்பொருட்களை வைத்து மக்களிடம் நாடகம் ஆடுகிறார்கள். நாங்கள் இங்கே நூறு மடங்கு புதுச்சேரியில் உள்ளதைவிட சிறப்பாக செயல்படுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ’நான் என் தொகுதியிலுள்ள ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கிய படத்தை போட்டு, மக்களுக்கு செய்த உதவிகளை களங்கப்படுத்தும் விதத்தில் வாட்ஸ் அப்பில், அரசு அலுவலர் பதிவிட்டார். இந்த வாசகங்களை துணைநிலை ஆளுநரும் பதிவுசெய்துள்ளார்.