தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மரங்களுக்கு அஞ்சலி செலுத்திய மனிதர்கள்! - Adivasi community paid tribute Aarey Forest trees

மும்பை: ஆரே காடுகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு உள்ளூர் ஆதிவாசிகள் அஞ்சலி செலுத்தினர்

aarey forest

By

Published : Oct 9, 2019, 12:04 PM IST

ஆரே காலனிப் பகுதியில் மெட்ரோ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது.

இதனையடுத்து மரங்களை வெட்டும் பணியில் இறங்கிய மெட்ரோ அலுவலர்கள், மும்முரமாக மரங்களை வெட்டிச் சாய்த்தனர்.

வெட்டப்பட்ட மரங்களுக்காக கண்ணீர்விடும் பெண்

மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்டக்கூடாது என தடைவிதித்தது.

ஆரே காடுகளுக்காக கண்ணீர் அஞ்சலி

இந்நிலையில் ஆரே காலனிப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் ஆதிவாசி சமூகத்தினர், வெட்டப்பட்ட மரங்களுக்கு மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

வெட்டப்பட்ட மரங்கள் போன்ற ஓவியத்தை வரைந்து அதற்குக் கீழ் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மலர்கள் தூவி மெழுவர்த்தி ஏந்தி அஞ்சலி

மனிதர்களைப் போல மரங்களையும் பாவித்து ஆதிவாசி மக்கள் அஞ்சலி செலுத்திய இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெழுகுவர்த்தி ஏந்தி மரங்களுக்கு அஞ்சலி செலுத்தும் மனிதர்கள்

இதையும் படிங்க: சரியும் மரங்களும் வளரும் கட்டிடங்களும் - மெட்ரோ நகர் மும்பை!

ABOUT THE AUTHOR

...view details