டெல்லி ஹுமாயூன் சாலையில் உள்ள காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் வீட்டில் அடையாளம் தெரியாத கும்பல் இன்று தாக்குதல் நடத்தியது. அப்போது, அவரின் வீட்டிலிருந்து சில முக்கியமாண ஆவணங்களை அந்த கும்பல் எடுத்து சென்றது.
தாக்குதலுக்குள்ளான காங்கிரஸ் மூத்தத் தலைவரின் வீடு! - அதிர் ரஞ்சன் சவுத்ரியின் வீட்டில் தாக்குதல்
19:13 March 03
டெல்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியின் வீட்டில் அடையாளம் தெரியாத கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.
வீடு தாக்கப்பட்டபோது, அதிர் ரஞ்சன் சவுத்ரியின் அலுவலர்களுக்கும் அந்த அடையாளம் தெரியாத கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் செல்லும் முன்னரே அந்த நபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அதிர் ரஞ்சன் சவுத்ரியின் அலுவலர் கூறுகையில், "மாலை 5:30 மணியளவில் வீடு தாக்குதலுக்குள்ளானது. மோதலில் ஒரு அலுவலர் தாக்கப்பட்டார்" என்றார்.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை: பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி போராட்டம்