நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக எம்.பி. ஆதீர் ரஞ்சன் சௌத்ரி உள்ளார். இவர் நாடாளுமன்றத்துக்கு நேற்று காரில் வந்தபோது, விஜய் சௌக் பகுதியில் தடுத்துநிறுத்தப்பட்டார்.
இதையடுத்து காவலர் ஒருவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரியின் காரை சோதனை செய்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஞ்சன், காரிலிருந்து இறங்கிவிட்டார். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு புகார் கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.
இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் காவலர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் இருமுறை நாடாளுமன்றம் வந்தார். இதனால் அவரது காரிலிருந்த அனுமதி சீட்டு (லேபிஸ்) சோதிக்கப்பட்டது என்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதீர் ரஞ்சன் சௌத்ரி, “டெல்லியில் என்ன நடக்கிறது. நாங்கள் நாடாளுமன்றத்துக்குப் பலமுறை வருவோம். அப்போது நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டோம். ஆகவே காரிலிருந்து இறங்கி நடந்து சென்றேன். இது என்ன வகையான சர்வாதிகாரம்?” என்றார்.
'இது ஒருவகை சர்வாதிகாரம்'- குமுறும் காங்கிரஸ் எம்.பி. காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரியின் காருக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி சீட்டு வருகிற 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையும் படிங்க:பிரதமர் மோடி சமூக வலைதளங்களைக் கையாள குவியும் பெண்கள்!