இதுகுறித்து, கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.பி.என். ராதாகிருஷ்ணன், மாநில நீதிபதிகள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மாவட்ட நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகளுக்கு எழுதிய கடிதத்தில்,
இனி, கொல்கத்தா நீதிமன்றங்களில் ஒலிக்காது 'மை லார்டு'! - லார்ட்ஷிப்
கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற அனைத்து வழக்கறிஞர்களும் மை லார்டு, லார்ட்ஷிப் என நீதிபதிகளை அழைப்பதற்குப் பதிலாக 'சார்' என அழைக்கலாம் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.
'இனி, மாவட்ட நீதித்துறையின் அலுவலர்கள், உயர் நீதிமன்றத்தின் பதிவு உறுப்பினர்கள், தலைமை நீதிபதிகள் உள்பட அனைவரையும் 'மை லார்டு' (என் இறைவன்) அல்லது 'லார்ட்ஷிப்' (பிரபுத்துவம்) என்று அழைப்பதற்குப் பதிலாக 'சார்' (ஐயா) என்று அழைக்க தான் விரும்புகிறேன். இது நீதி மற்றும் நிர்வாக முன்மாதிரிகளுக்கு பொருந்தக்கூடிய ஒன்று’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 'மை லார்டு' அல்லது 'லார்ட்ஷிப்பிற்கு' பதிலாக வங்காளத்திலும் அந்தமானிலும் உள்ள அனைத்து நீதித்துறை அலுவலர்களும் ’ஐயா' என்று அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.