இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து, புதுச்சேரி கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான முதல் மாதிரி நன்னடத்தை நெறி புதுச்சேரி பிராந்தியம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இது தேர்தல் நடைமுறை நிறைவுபெறும் தேதி வரை அமலில் இருக்கும் என்றார். காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 35,325 பேர் வாக்களிக்க உள்ளனர் என்றார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்காளர் பரிசோதிக்க காகித தணிக்கை இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. இங்கு 32 வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க மாதிரி நன்னடத்தை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்குமாறு, ஒத்துழைப்பு நல்குமாறு தேர்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.