தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீன அதிபர் வருகை தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் - புதுச்சேரி முதலமைச்சர் - The people of Tamil Nadu will be proud

புதுச்சேரி: சீன அதிபர் வருகை தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்கும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

துச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Oct 9, 2019, 1:12 PM IST

Updated : Oct 11, 2019, 12:09 PM IST

புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஜான் குமாரை ஆதரித்து செந்தாமரை நகரில் முதலமைச்சர் நாராயணசாமி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் நாராயணசாமி

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படுகிறது. இதற்கு ஆதரவாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் செயல்படுகிறார். புதுச்சேரிக்கு மோடி அரசு தரவில்லை என்றாலும், நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்துகிறோம். இது தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி ஆட்சியைக் கலைக்க முயற்சிக்கிறார்.

அது பகல் கனவாகவே அமையும். ஆட்சி நடத்த திறமை இல்லாதவர் ரங்கசாமி, புதுச்சேரியை குட்டிச்சுவராக்கியவர் ரங்கசாமி, இவர் எப்படி ஆட்சி மாற்றத்தை செய்வார், இதனை மக்கள் நம்பத் தயாராக இல்லை. மேலும் சீன அதிபர் வருகை தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். இந்த வருகையினால் இந்திய-சீன நல்லுறவு பெருகும் என்றார்.

Last Updated : Oct 11, 2019, 12:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details