நாடு முழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பொறுப்பை பொதுத் துறை – தனியார் கூட்டு (பி.பி.பி.) என்ற பெயரில் 50 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அகமதாபாத், லக்னோ, பெங்களூரு, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், கவுஹாத்தி ஆகிய நகரங்களின் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அதானி குழுமத்துடன் பிப்.14ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.