தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி. சித்ரகூட்டில் 25 மெகாவாட் சூரிய மின்னாற்றல் நிலையம் தொடங்கிவைப்பு! - Adani Green commissions 25 MW solar plant

லக்னோ: சித்ரகூட்டில், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் சார்பில் 25 மெகாவாட் சூரிய மின்னாற்றல் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

லக்னோ
லக்னோ

By

Published : Jan 11, 2021, 4:13 PM IST

அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், உத்தரப் பிரதேசம் மாநிலம் சித்ரகூட்டில் 25 மெகாவாட் சூரிய மின்னாற்றல் நிலையத்தைப் புதிதாக தொடங்கியுள்ளது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, நொய்டா பவர் கம்பெனி லிமிடெட் (என்.பி.சி.எல்.) நிறுவனத்திற்கு ரூ.3.08/கிலோவாட் என்ற அளவில் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் 80-க்கும் அதிகமான சூரிய மின்னாற்றல் மற்றும் காற்றாலைகளின் செயல்திறனைக் கண்காணித்து ஆய்வுசெய்யும் ஏஜிஇல்-யின் அதிநவீன எரிசக்தி நெட்வொர்க் செயல்பாட்டு மையத்துடன் சித்ரகூட்டில் உள்ளசூரிய மின்னாற்றல் நிலையம்இணைக்கப்படவுள்ளது.

இதை ஆரம்பித்ததன் மூலம், ஏஜிஇஎல் மொத்தமாக 14,795 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்டதாக வலுப்பெறுகிறது.

கரோனா காலக்கட்டத்திலும், 100 மெகாவாட் சூரிய மின்னாற்றல் நிலையத்தை சமீபத்தில் ஏஜிஇஎல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details