தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அம்மா உறுப்பினராக தொடரும் பினீஷ் கொடியேறி - பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பினீஷ் கொடியேறி

திருவனந்தபுரம்: பினீஷ் கொடியேறி மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்க (அம்மா) உறுப்பினராக தொடர்ந்து இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினீஷ் கொடியேறி
பினீஷ் கொடியேறி

By

Published : Oct 31, 2020, 3:55 PM IST

கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் 2ஆவது மகன் பினீஷ் கொடியேறி. இவர் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அத்துடன் பெங்களூரு, சென்னை உள்பட பல இடங்களில் இவர் நிதி நிறுவனங்கள் நடத்திவருகிறார். கேரளாவில் பிரபலமாகப் பேசப்படும் குற்றச் சம்பவங்களில் பினீஷ் கொடியேறி பெயரும் அடிபடுவது உண்டு. 2 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் பிடிபட்டது.

இதில் கன்னட டிவி நடிகை அனிகா, கேரளாவைச் சேர்ந்த முகமது அனூப், பாலக்காட்டை சேர்ந்த ராமச்சந்திரன் என மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் முகமது அனுபுக்கும், பினீஷ் கொடியேறிக்கும் தொடர்புள்ளது தெரியவந்தது.

அதேபோல் தங்க கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட சுவப்னாவிற்க்கும் பினீஷ் கொடியேறிக்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இருப்பினும் பினீஷ் கொடியேறி மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்க (அம்மா) உறுப்பினராக தொடர்ந்து இருப்பார் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பினீஷ் கொடியேறி தொடர்ந்து அம்மாவில் இருப்பதற்கான காரணம் அவரது தந்தையான கொடியேறி பாலகிருஷ்ணனே எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்றொரு காரணம் என்னவென்றால் அம்மா உறுப்பினர்கள் பினீஷை அடிப்படை உறுப்பினர் உரிமையை நீக்க கோரி விவாதித்தால், அது சங்கத்தின் அமைதியை இழக்க நேரிடும். இதை இப்போது அவர்கள் விவாதிக்க தொடங்கினால் சங்கத்தினர் சில முக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

சங்கத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களது சொந்த விஷயங்கள் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details