தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமிதாப் பச்சனுக்கு கரோனா, மருத்துவமனையில் அனுமதி - அமிதாப் ட்வீட்

மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Actor Amitabh Bachchan hospitalised Amitabh Bachchan Mumbai’s Nanavati hospital அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி அமிதாப் பச்சன் மும்பை நானாவதி மருத்துவமனை அமிதாப் பச்சனுக்கு கரோனா அமிதாப் ட்வீட் Amithab Tweet
Actor Amitabh Bachchan hospitalised Amitabh Bachchan Mumbai’s Nanavati hospital அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி அமிதாப் பச்சன் மும்பை நானாவதி மருத்துவமனை அமிதாப் பச்சனுக்கு கரோனா அமிதாப் ட்வீட் Amithab Tweet

By

Published : Jul 11, 2020, 11:13 PM IST

நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையிலுள்ள நானாவதி மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை (ஜூலை11) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரின் குடும்பத்தாருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதற்கான முடிவுகளுக்காக காத்திருப்பதாக அமிதாப் ட்வீட் செய்துள்ளார்.

அமிதாப் கடைசியாக ஷூஜித் சிர்காரின் நகைச்சுவை படமான குலாபோ சித்தாபோவில் ஆயுஷ்மான் குர்ரானாவுடன் நடித்தார்.

இந்தப் படம் ஆரம்பத்தில் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இது அமேசான் பிரைம் வீடியோவில் திரையிடப்பட்டது.
கவுன் பனேகா குரோர்பதியின் பன்னிரண்டாவது சீசனை அமிதாப் பச்சன் விரைவில் நடத்தவிருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செஹ்ரே, பிரம்மஸ்திரா மற்றும் ஜுண்ட் ஆகியவை அமிதாப் பச்சனின் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படங்கள் ஆகும்.

இதையும் படிங்க: விகாஸ் துபே என்கவுன்ட்டர்: உ.பி. அரசைச் சாடிய கபில் சிபல்

ABOUT THE AUTHOR

...view details