தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கால்பந்து வீரர்களுக்கு எதிராக கொதித்தெழுந்த பெண்கள்! - மெக்சிகோ பெண் உரிமை

மெக்சிகோ: பெண் உரிமை பாடலை கிண்டலடித்த கால்பந்து வீரர்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண் உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

football protest
football protest

By

Published : Dec 7, 2019, 1:03 PM IST

மெக்சிகோ நகரை தலையகமாகக் கொண்டுள்ள 'கிளப் அமெரிக்கா' என்ற கால்பந்து கிளப்பின் அண்டர் 17 வீரர்கள், 'உங்கள் வழியில் ஒரு பாலியல் குற்றவாளி' (A Rapist in your Way) என்னும் பெண் உரிமை பாடலை கிண்டலடித்து சிரிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ, பெண் உரிமை ஆர்வலர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடந்துகொண்டதாகவும், அதற்கு அந்த கால்பந்து வீரர்கள் மனிப்பு கேட்கவேண்டும் எனவும் வலியுறுத்தி நூற்றுக்கணக்கான பெண் உரிமை ஆர்வலர்கள் மெக்சிகோ நகரின் ஸோகாலோ சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பெண்கள் தங்களது கண்களில் துணி கட்டிக்கொண்டு கால்பந்து வீரர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கால்பந்து வீரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தங்கள் கிளப்பில் உள்ள இளைய கால்பந்து வீரர்களுக்கு பெண்கள் மீதான வன்கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படும் எனவும் கிளப் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டப் பெண் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details