எல்கர் பரிஷத் மாநாடு
2017 டிசம்பர் 31ஆம் தேதி புனேயில் உள்ள ஷானிவார்வாடா பகுதியில் எல்கர் பரிஷத் மாநாடு நடந்தது. மாவோயிஸ்ட்டுகள் ஆதரவு தெரிவித்த அந்த மாநாட்டில் பங்கேற்ற ஏராளமான சமூக செயற்பாட்டாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசினார்கள். இதன் எதிரொலியாக அடுத்தநாள் காலை பயங்கர கலவரம் வெடித்தது.
அந்தக் கூட்டத்தில் கலவரத்தினை தூண்டும்வகையில் பேசிய ஐந்து பேரை, காவல் துறையினர்ஜூன் மாதம்கைது செய்தனர். அவர்கள்...
- வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்,
- தலித் உரிமைகளுக்கான போராளி சுதிர் தாவாலே,
- பிரதம அமைச்சரின் ஊரக வளர்ச்சித் திட்டத்தில் முன்பு பணியாற்றிக்கொண்டிருந்த மகேஷ் ராவுட்,
- நாக்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ஷோமா சென்,
- டெல்லியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சன் ஆகியோர்.
ராஜிவ் போல மோடிக்கு...!
இதில் ரோனா வில்சனின் இருப்பிடத்திலிருந்து மோடியை கொலை செய்யத் திட்டமிட்ட மாவோயிஸ்ட்டுகளின் துண்டுப் பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டன. அதில், ராஜிவ் காந்தியை கொலை செய்தது போலவே ஒரு திட்டத்தினைத் தீட்டி மோடியை கொலை செய்யும் நோக்கிலான திட்டங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தன.