குடியுரிமை திருத்த மசோதா அண்மையில் சட்டமாக்கப்பட்டது. இஸ்லாமியர்களையும், இலங்கைத் தமிழர்களையும் புறக்கணித்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு இரண்டும் இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரானது என்று நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்துவருகிறது.
கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர் என பல தரப்பட்டோரும் இதற்காக போராடி வருகின்றனர். இந்நிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவரும், சமூக ஆர்வலருமான உமர் காலித் குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி செங்கோட்டை அருகே அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் இறங்கினார்.