ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்கள் இயக்கத்தின் தலைவர் ஷேக்லா ரஷீத் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை பதிவிட்டிருந்தார். அதில் இந்திய ராணுவம், மத்திய அரசு குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டிருந்தார். இரவு நேரங்களில் ராணுவத்தினர் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைகின்றனர், மக்களை கொடுமைப் படுத்துகின்றனர் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்து ஷேக்லா ரஷீத் மீது குற்றம்சாட்டியது.
என்னிடம் விசாரித்தால் ஆதாரத்தை சமர்பிப்பேன்: ஷேக்லா ரஷீத்! - பதில்
டெல்லி: ராணுவத்தை விமர்சித்தது தொடர்பாக, இந்திய ராணுவம் என்னிடம் விசாரணை மேற்கொண்டால் ஆதாரங்களை சமர்பிப்பேன் என்று, மக்கள் இயக்கத்தின் தலைவர் ஷேக்லா ரஷீத் கூறியுள்ளார்.
shehla rashid
இதையடுத்து, மக்கள் இயக்கத்தின் தலைவர் ஷேக்லா ரஷீத் மீது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அலாக் அலோக், டெல்லி காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பின் டெல்லி சிறப்பு காவல்துறைக்கு இந்த புகார் மாற்றப்பட்டது.
இந்நிலையில் புகார் தொடர்பாக ஷேக்லா ரஷீத் கூறியதாவது, இந்திய ராணுவம் என்னை அழைத்து விசாரணை மேற்கொண்டால் நான் ஆதாரத்தை சமர்ப்பிப்பேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.