ஜம்மு-காஷ்மீர் மாநில காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு படையினருடன் கூட்டாக இணைந்து ஹர்வான் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனையில், அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டன.
இந்தத் தகவலை ட்விட்டர் செய்தி வாயிலாக இந்திய ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புல்வாமா மாவட்டத்திலுள்ள பாந்த்ஸூ கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இந்தச் சம்பவத்துக்கு பிறகு அப்பகுதியில் பாதுகாப்பு படையினர், மாநில காவலர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:குற்றம் - 02: இந்தியாவை அச்சுறுத்தும் பிஷிங் - தப்பிக்க வழிகள் என்ன?