சட்டப்பேரவை உறுப்பினர் மீது கட்சிதாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர்
புதுச்சேரி: பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலு மீது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, சட்டப்பேரவை வளாகத்தில் இன்று ( ஜூலை 11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொறடா அனந்தராமன் இரண்டு தடவை அளித்த புகாரின் அடிப்படையில் ஆட்சிக்கும், அரசுக்கும் எதிராக செயல்படுவது குறித்து பாகூர் சட்டப்பேரவை உறுப்பினர் தனவேலுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
அதற்கு உரிய விளக்கம் அளிக்காததால் அவர் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் அவர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டு, அவரது சட்டப்பேரவை தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று சிவக்கொழுந்து கூறினார்.