கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் பேருந்து ஓட்டுநர் தனது அருகில் பல பெண் பயணிகளை உட்கார அனுமதித்துள்ளார். அப்போது, பேருந்து ஓடிக்கொண்டிருக்கும் போது அந்த ஓட்டுநர், அருகில் அமர்ந்திருந்த இளம் பெண்களை கியர் மாற்ற அனுமதித்துள்ளார். இதைப் படம் பிடித்த சக பயணி ஒருவர், சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
'பெண் பயணிகளுடன் விபரீதமாக விளையாடிய ஓட்டுநரின் உரிமம் ரத்து' - கேரளாவில் பெண்களுடன் பேருந்தில் விளையாடிய ஒட்டுநர்
திருவனந்தபுரம்: பேருந்தில் ஓட்டுநர் அருகில் அமர்ந்த பெண்களை கியரை இயக்க வைத்த ஓட்டுநரின் உரிமத்தை ஆறு மாத காலத்திற்கு ரத்து செய்து போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
ஒட்டுநர்
இந்த காணொலியைப் பார்த்த பல தரப்பு மக்கள், தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்து, ஆர்.டி.ஓ கவனத்திற்கு சென்றது. இதை தொடர்ந்து அவர் நடத்திய விசாரணையில், பேருந்தைப் பாதுகாப்பாக இயக்காமல் பயணிகளின் உயிருடன் விளையாடிய ஓட்டுநர் ஷாஜியின் ஓட்டுநர் உரிமத்தை ஆறு மாதங்கள் ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஆபத்தைத் தாங்கி நிற்கும் பாலம்: அலுவலர்கள் அலட்சியம்!
Last Updated : Nov 17, 2019, 8:57 AM IST