ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ரோச்மா நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணி ராயப்பன் (35). ரோச்மாநகர் கிராமத்திலிருந்து சாயல்குடி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துகொண்டிருந்தார்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள நரிப்பையூரை அடுத்த மாணிக்கம் நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே வந்த தண்ணீர் டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.