(தெலங்கானா): நல்கொண்டா மாவட்டம், அங்காடி பேட்டை பெடடிசர்லாப்பள்ளி பகுதியில் தொழிலாளர் சென்ற ஆட்டோ மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 11 பேர் காயமுற்றனர். காயமடைந்தவர்கள், தேவரகொண்டா மற்றும் ஹைதராபாத் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்களின் நிலைமை மோசமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: 9 பேர் பலி, 11 பேர் படுகாயம்! - நல்கொண்டா விபத்து
அங்காடி பேட்டை, பெடடிசர்லாப்பள்ளி பகுதியில், தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோ லாரி மீது நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர், 11 பேர் காயமடைந்தனர்.
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து
விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் தேவரகொண்ட மண்டலில் உள்ள சிந்தகாவி பகுதியில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. ஒரே ஆட்டோவில் 20 தொழிலாளர்கள் ரங்காரெட்டிகுடமிலிருந்து வரும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தேவரங்கொண்டா துணை காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க:மருந்து நிறுவனங்களில் நிகழ்ந்த தீ விபத்துகள்!