தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’விவசாயிகளுக்கு துரோகம் இழைக்காதீர்கள்’ - ராகுல் காந்தி - விவசாயிகள் போராட்டம்

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்திவரும் நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் அது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகமாக அமையும் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

By

Published : Dec 3, 2020, 4:00 PM IST

தலைநகர் டெல்லியில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டத்தால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங்குடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (டிச.03) பேச்சுவார்த்தை நடத்துகிறார். முன்னதாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமரிந்தர் சிங் கண்டனம் தெரிவித்திருந்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுடன் இந்தப் போராட்டம் எட்டாவது நாளை எட்டியுள்ளது. இதனால் எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று (டிச.03) நான்காம்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இந்நிலையில், ”வேளாண் சட்டங்களை ரத்து செய்யவிட்டால் அது விவசாயிகளுக்கும் இந்தியாவிற்கும் செய்யும் துரோகம்” என ராகுல் காந்தி விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details