பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் சிலரை கொச்சைப்படுத்தும் வகையில் ஆபாசமான பதிவுகளை ட்விட்டரில் சிலர் பதிவிட்டுள்ளனர். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரக்காண்ட்டில் இயங்கிவரும் லால் பகதூர் சாஸ்திரி குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பயிற்சி மையம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பெண் ஐபிஎஸ் அதிகாரிகளை கொச்சைப்படுத்தும் வகையில் ஆபாசமான ட்வீட்டுகளை சிலர் பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவுகளை கண்டித்து உத்தரக்காண்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சைபர் சிறப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. அடையாளர் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சைபர் பிரிவின் துணை காவல் ஆய்வாளர் ரிதின் அகர்வால் தெரிவித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகளை தவிர்த்து மற்ற அலுவலர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் ஆபாசமான ட்வீட்களை சிலர் பதிவிட்டுள்ளனர்.