இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையினர் பாகிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது. இதையடுத்து பாகிஸ்தான் படையினர் அபிநந்தனை கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் தலையீடு இருந்ததையடுத்து அபிநந்தன் இந்தியா வந்தார். இந்நிலையில், விமானப்படையின் 87ஆவது ஆண்டுவிழா நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது.