தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும்!'

டெல்லி: விமானப்படை வீரர் அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி கோரிக்கைவிடுத்துள்ளார்.

By

Published : Jun 24, 2019, 4:21 PM IST

அதிர் ரஞ்சன் சவுத்ரி

நாடாளுமன்றம் செல்லும் எம்.பி.க்களில் சிலர் மக்கள் பிரச்னை பற்றி பேசுகிறார்களோ இல்லையோ, தேவையில்லாததைப் பற்றி பேசத் தயங்குவதில்லை. வேலைவாய்ப்பின்மை, தண்ணீர் தட்டுப்பாடு என மக்களுக்காக பேச அத்தனை சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் பெர்காம்பூர் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி, விமானப்படை வீரர் அபிநந்தன் மீசையைப் பற்றி பேசியிருக்கிறார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பேசிய எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி, விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். அவரின் மீசையை தேசிய மீசையாக (national moustache) அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த விமானம் ஒன்று நம் ராணுவ தளத்தில் தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அதை இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பின்தொடர்ந்து சென்று பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். அதன்பிறகு பாகிஸ்தான் அரசு அபிநந்தனை விடுவித்தது. இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு பாராட்டுகள் குவிந்தன.

அபிநந்தன் புகைப்படம் பதித்த சேலைகள், டி-ஷர்ட்கள் விற்பனைக்கு வந்தன. அவருடைய மீசை போலவே பலரும் மீசை வைத்து சுத்தினார்கள். தற்போது அதை தேசிய மீசையாக்க வேண்டும் என பெர்காம்பூர் காங்கிரஸ் எம்.பி. துடிக்கிறார். ஓட்டுப்போட்ட மக்களின் நிலைதான் கொடுமை என நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details