இந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்த நிலையில் விமர்சனங்களும் எழுந்தன. மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அவரை ஒரு இடதுசாரி என்றும், அவரின் திட்டங்களை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வறுமை ஒழிப்பிற்கு திட்டத்தினை வகுத்துக் கொடுத்த அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்துகள். ஆனால், அவரின் சாதனையை அரசியல் ரீதியாக அணுகுவது தவறு. அவரின் சாதனையால் அனைத்து இந்தியர்களும் பெறுமைப்பட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.