தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி - பிரதமர் மோடி சந்திப்பு! - அபிஜித் பானர்ஜி - மோடி சந்திப்பு

நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி இந்திய பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பொருளாதார நிலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

Abhijit Banerjee

By

Published : Oct 22, 2019, 1:54 PM IST

அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டஃப்லோ, மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அக்டோபர் 14ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தியரான அபிஜித் பானர்ஜிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய பிரதமர் மோடி "அபிஜித் பானர்ஜிக்கு வாழ்த்துகள், வறுமை ஒழிப்பில் அவரின் பங்கு மகத்துவமானது" என்று ட்வீட் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Abhijit Banerjee meets PM Modi

இதையடுத்து இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பொருளாதார நிலவரம் குறித்து அபிஜித் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரது சந்திப்பு குறித்து பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "மனித அதிகாரம் மீதான அவரது ஆர்வம் தெளிவாகக் காணப்படுகிறது. அனைத்து விதமான துறைகள் குறித்தும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினோம். அவரது சாதனைகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு மிகச் சிறந்த வாழ்த்துகள்" என்று கூறியுள்ளார்.

PM Modi tweet about Abhijit Banerjee

இதையும் படிங்க: நோபல் வென்ற இந்தியர் - அபிஜித் பானர்ஜி!

ABOUT THE AUTHOR

...view details