உலகளவில் பிரபலமான ஏடிபி வங்கி, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் தீவிர வறுமையை ஒழிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பல நாடுகளுக்கு பேரிடர் காலத்தில் நிதியுதவி அளித்துவருகிறது. முன்னதாக, கரோனா காலகட்டத்தில் இந்தியாவிற்கு உதவுவதற்காக 150 கோடி டாலர் மதிப்பிலான CARE திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டமானது நோய்க் கட்டுப்படுத்துதல், தடுப்பு நடவடிக்கைக்கு உதவுவது மட்டுமின்றி, ஏழைகள், பொருளாதார ரீதியாக கரோனாவால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவும் வகையில் வகுக்கப்பட்டிருந்தது.
கரோனா தடுப்புப் பணிக்காக இந்தியாவிற்கு மேலும் 30 லட்சம் டாலர் கடனுதவி!
டெல்லி: கரோனா நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இந்தியாவிற்கு ஏற்கனவே 150 கோடி டாலர் கடனுதவி வழங்கிய ஏடிபி வங்கி, தற்போது மேலும் 30 லட்சம் டாலர் வழங்கியுள்ளது.
adb
இந்நிலையில், கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு மீண்டும் 30 லட்சம் டாலர் கடனுதவி வழங்குவதாக ஏடிபி வங்கி அறிவித்துள்ளது.