தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கலவர பீதியில் டெல்லி மக்கள்! - சமூக வலைதளங்கள் தீவிர கண்காணிப்பு - டெல்லி கலவர பீதி, சஞ்சங் சிங், ஆம் ஆத்மி, வதந்தி, டெல்லி கலவரம், காவல்துறை

டெல்லி: டெல்லியில் வன்முறை தொடர்பான வதந்திகள் பரவிவருகின்றன. இதுபோன்ற வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

AAP MP Sanjay Singh  Sanjay Singh speaks to Delhi police chief  Sanjay Singh's tweet  Sanjay Singh on rumours  கலவர பீதியில் டெல்லி மக்கள்! சமூக வலைதளங்கள் தீவிர கண்காணிப்பு  டெல்லி கலவர பீதி, சஞ்சங் சிங், ஆம் ஆத்மி, வதந்தி, டெல்லி கலவரம், காவல்துறை  AAP MP Sanjay Singh speaks to Delhi police chief; asks people not to pay heed to rumours
AAP MP Sanjay Singh speaks to Delhi police chief; asks people not to pay heed to rumours

By

Published : Mar 2, 2020, 9:05 AM IST

டெல்லி வன்முறை, வதந்திகள் தொடர்பாக மக்களுக்கு வேண்டுகோள்விடுத்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ட்வீட்டரில், “டெல்லியில் வன்முறை வதந்திகள் பரவிவருகின்றன. இது தொடர்பாக நான் டெல்லி சிபியுடன் (காவல் ஆணையர்) பேசினேன். வன்முறை பற்றிய தகவல்கள் முழுக்க முழுக்க வதந்திகள். தேசிய தலைநகரின் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது” எனக் கருத்து பதிவிட்டிருந்தார்.

டெல்லியில் நேற்றும் வன்முறை தொடர்பான வதந்திகள் காட்டுத் தீப்போல் பரவியது. இதனால் மேற்கு டெல்லிவாசிகள் பீதி அடைந்தனர். இந்தச் சம்பவத்தை மறுத்த டெல்லி காவல் துறையினர், மக்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள்விடுத்தனர்.

இது குறித்து டெல்லி (மேற்கு) காவல் துணை ஆணையர் (டிசிபி) தீபக் புரோஹித் கூறுகையில், “மேற்கு மாவட்டத்தின் கியாலா-ரகுபீர் நகர் பகுதியில் ஒருவித பதற்றம் நிலவுவதாக ஒரு வதந்தி காணப்பட்டது. இதன் பின்னணியில் எந்த உண்மையும் இல்லை. நிலைமை முற்றிலும் இயல்பானது, அமைதியானது என்பதால் அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திலக் நகர், கியாலா பகுதியில் சில வகுப்புவாத பதற்றங்கள் குறித்து சில வதந்திகள் உள்ளன. திலக் நகர், கியாலா, முழு மேற்கு மாவட்டத்திலும் எந்தவிதமான பதற்றமும் இல்லை. ஆகவே மக்கள் கவலைப்பட ஒன்றுமில்லை.

தென்கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பதற்றமான நிலைமை குறித்த சில ஆதாரமற்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. இவை அனைத்தும் வதந்திகள் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். இதுபோன்ற வதந்திகளில் மக்கள் கவனம் செலுத்த வேண்டாம். டெல்லி காவல் துறை சமூக வலைதள கணக்குகளை உன்னிப்பாக கண்காணித்துவருகிறது. வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மேலும் துவாரகா, பதர்பூர் பகுதியில் வன்முறை பற்றி பரவிய தகவல்களும் ஆதாரமற்ற வதந்திகள் என அவர் கூறினார்.

முன்னதாக டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி.), ஏழு மெட்ரோ நிலையங்களின் நுழைவு, வெளியேறும் வாயில்களை மூடிவிட்டது. எனினும் இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. தற்போது அவை திறக்கப்பட்டுவிட்டன.

இதையும் படிங்க:அமைதியை நிலைநாட்ட தயார்- ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details