தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 7, 2019, 2:27 PM IST

ETV Bharat / bharat

'கெஜ்ரிவால் தாக்கப்பட்டதற்கு ராகுல், மோடியே காரணம்!'

டெல்லி: தேர்தல் பரப்புரையின்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதற்கு பின்னால் ராகுல் காந்திக்கும், மோடிக்கும் தொடர்பு உள்ளது என ஆம் ஆத்மி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

AAP MP accuses PM Modi, Rahul Gandhi behind attack on Delhi CM Kejriwal during roadshow

மக்களவைத் தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு மே 12ஆம் தேதி நடைபெறுகிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ளது. இதனால் தலைநகரான டெல்லியில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை மேற்கொண்டு வந்தார். அப்போது சுரேஷ் என்பவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கழுத்துப் பகுதியில் ஓங்கி அறைந்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், ராகுல் காந்தி அமைதியாக இருப்பதைப் பார்த்தால் கெஜ்ரிவால் தாக்கப்பட்டதற்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது என சந்தேகம் எழுப்பினார். மேலும், மோடிக்கு எதிராக பேசியதால் இந்தத் தாக்குதல் நடத்திருக்கலாம் என்றும், மோடிக்கும் இந்தத் தாக்குதலில் தொடர்பு உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details