இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11 ஆயிரத்து 458 ஆக உள்ளது.
இதனால் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்து எட்டு ஆயிரத்து 993 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 386 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை எட்டு ஆயிரத்து 884 ஆக உள்ளது.
இந்நிலையில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்ஜய் சிங், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நாட்டில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மக்களில் யாருக்காவது காய்சல் உள்ளிட்ட சிறு அறிகுறிகள் தென்பட்டாலும் கூடாது அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:'முறையான தகவல் பரிமாற்றத்தால்தான் நியூசிலாந்தால் கரோனாவை வீழ்த்த முடிந்தது' - தூதரின் பிரத்யேகப் பேட்டி