தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மக்களுக்கு தேவைப்பட்ட அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் - கெஜ்ரிவால் - டெல்லி கலவரம் குறித்து கெஜ்ரிவால்

டெல்லி: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆம் ஆத்மி அரசு செய்யும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Chief Minister Arvind Kejriwal
Chief Minister Arvind Kejriwal

By

Published : Mar 2, 2020, 4:58 PM IST

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாகீன் பாக்கில் மாதக்கணக்கில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றுவந்தது. அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் கடந்த வாரம் அங்கு வன்முறை ஏற்பட்டது. வடகிழக்கு டெல்லி முழுவதும் பரவிய இந்த வன்முறையில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்யும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம்.

இந்த கலவரத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவைப்படும் நிவாரணம் சரியாக சென்றடைகிறதா என்பதை நானே தனிப்பட்ட முறையில் உறுதி செய்கிறேன். அவர்களின் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல மற்றொரு ட்வீட்டில், "தேவைப்படும் அனைவருக்கும் நிவாரணங்கள் சென்றடைவதை உறுதிசெய்ய நாங்கள் 24/7 வேலை செய்கிறோம். உதவி தேவைப்படுபவர்கள் #DelhiRelief என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி எங்களை தொடர்புகொள்ளலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க டெல்லி வன்முறை: உயிரிழப்பு 46 ஆக உயர்வு!

ABOUT THE AUTHOR

...view details