தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘ஆம் ஆத்மியின் ஆட்சி மொத்தமும் தோல்வி’ - ஷீலா தீட்சித் குற்றச்சாட்டு! - ஆம் ஆத்மி அரசு

டெல்லி: ஆம் ஆத்மி அரசின் மொத்த ஆட்சியும் தோல்வி அடைந்திருப்பதாக முன்னாள் முதலமைச்சரும், டெல்லி காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆம் ஆத்மி அரசு ஆட்சி மொத்தமும் தோல்வி -ஷீலா தீட்சித் குற்றச்சாட்டு!

By

Published : May 8, 2019, 12:58 PM IST

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஆறாம் கட்ட வாக்குப்பதிவு டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்கும் என்ற கணிப்புகள் எழுந்த நிலையில், தொகுதி பங்கீடு விவகாரத்தினால் கூட்டணி அமையவில்லை என கூறப்படுகிறது. இருந்தபோதும், தேர்தலுக்கு பின்னான கூட்டணியில் இணையும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘டெல்லியில் ஆம் ஆத்மி அரசின் மொத்த ஆட்சியும் தோல்விதான். முன்னதாக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை’ என டெல்லி முன்னாள் முதலமைச்சரும், டெல்லி காங்கிரஸ் தலைவருமான ஷீலா தீட்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details