இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில், மேற்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பல்பிர் சிங் ஜக்கர் என்பவர் போட்டியிடுகிறார்.
‘என் அப்பா கேஜ்ரிவாலுக்கு 6 கோடி கொடுத்தார்..!’ - போட்டு உடைத்த வேட்பாளரின் மகன்! - delhi aap candidate
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு தனது தந்தை 6 கோடி ரூபாய் பணம் கொடுத்ததாக ஆம் ஆத்மி வேட்பாளரின் மகன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்த தனது தந்தை, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவாலிடம் ஆறு கோடி ரூபாய் பணம் கொடுத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கியதாக பல்பிர் சிங்கின் மகன் உதய் ஜக்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, தனது மகன் பிறந்ததிலிருந்து அவரது தாய் வீட்டில் வசிப்பதாகவும், தனக்கும் அவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆம் ஆத்மியின் வேட்பாளர் பல்பிர் சிங் ஜக்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.