வடகிழக்கு டெல்லியின் சந்த் பாக் பகுதியில் நடந்த வன்முறையில் முகாந்திரம் இருப்பதாக ஆம் ஆத்மி கவுன்சிலர் தஹீர் உசேன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் மீது டெல்லி காவலர்கள் கொலை, தடயங்கள் அழித்தல் உள்ளிட்ட இருபிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தஹீர் உசேனை காப்பாற்ற முயல்வது ஏன் என மாநிலத் தலைவர் மனோஜ் திவாரி கேள்வியெழுப்பினார். இது குறித்து அவர் கூறுகையில், “டெல்லி வன்முறையில் எந்தக் கட்சியை சேர்ந்தவர் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
ஆனால் சொந்தக் கட்சிக்காரரே வன்முறையில் இறங்கியுள்ளார். ஆம் ஆத்மி கவுன்சிலர் உசேனின் வீட்டில் பெட்ரோல் குண்டுகள், கற்குவியல், திராவகம் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆக வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்லி கலவரத்தில் 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறையில் திட்டமிட்டு தனியாரின் சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன. டெல்லி வன்முறையை தடுக்க காவல் துறை தவறிவிட்டது என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சுமத்தினார்.