தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக முன்வைத்த மதவாத அரசியலுக்கு 'நோ'; ஆம் ஆத்மியின் வளர்ச்சி அரசியலுக்கு ’எஸ்’

டெல்லி: சிஏஏ, என்ஆர்சி ஆகியவற்றின் மூலம் மதவாத வெறுப்பரசியலை முன்வைத்த பாஜகவை புறம்தள்ளி வளர்ச்சி அரசியலை முன்வைத்த ஆம் ஆத்மி கட்சியை டெல்லி மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

BJP
BJP

By

Published : Feb 12, 2020, 4:20 PM IST

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் தீவிரமான பிரச்சாரத்தைக் கண்டு, ஆம் ஆத்மி கட்சி மீண்டும் வெற்றிபெறுமா என்று சந்தேகத்தை உருவாக்கியது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் அந்தச் சந்தேகத்தை மட்டுமல்ல, பாஜக தலைவர்கள் அவர் மீது வீசிய ஒவ்வொரு குற்றச்சாட்டையும் தோற்கடித்துள்ளார். இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை வென்று , அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெல்லியை ஆட்சிசெய்யத் தயாராக உள்ளது. மேலும், அவரது இலவச திட்டத்தால் ஈர்க்கப்பட்டு அவரைப் பார்த்து மற்ற மாநிலங்களும், அவருடைய இலவச குடிநீர் மற்றும் மின்சாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளார்கள் .

இந்தத் தேர்தலை, பாஜக சிஏஏ, என்ஆர்சி மீதான வாக்கெடுப்பாக மாற்ற முயன்றது. ஆனால், டெல்லி மக்கள் தங்களின் கவலைகள் அதுவல்ல என்பதை 'ஆம் ஆத்மி கட்சி' பெற்ற வெற்றி நிரூபித்துள்ளது. குடிமக்களின் தேசிய பதிவேடு மூலம் 'களை' எடுக்க அரசாங்கம் விரும்பி, வெளிநாட்டினரால் இந்தியா அச்சுறுத்தப்படுகிறது என்ற பாஜக முன்வைத்த கதையை மக்கள் நம்பவில்லை.

60 நாள்களுக்கும் மேலாகப் பெண்கள் முன்னின்று நடத்தும் ஷாஹீன் பாக் போராட்டங்கள், தேச விரோதமானவை மட்டுமல்ல, தேச விரோத சக்திகளால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கப்படுகிறது என்று பாஜக பரிந்துரைத்தது. பாஜக இந்தத் தேர்தலை மத அடிப்படையில் திசைதிருப்ப மேற்கொண்ட முயன்றது சுத்தமாக எடுபடவில்லை. மேலும் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பிரவேஷ் வர்மா போன்றவர்களின் தரக்குறைவான பேச்சுக்களும் மக்களின் மனதைக் கவரவில்லை .

உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு ’பிரியாணி’ என்று மீண்டும் மீண்டும் கூறியது வெறுப்பை உண்டாக்கியது. மேலும், அவரின் பேச்சைக் கேட்காதவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதையும் மக்கள் ஆராய்ந்தார்கள். நாகரிகமான அரசியலை விரும்பிய டெல்லி மக்கள் அவரது கருத்துக்களை புறந்தள்ளினர். ஆனால், தேர்தல் ஆணையத்தின் மென்மையான போக்கால் , ஜாமியா, ஷாஹீன் பாக் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ஊக்குவித்தது. டெல்லி மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் தங்களுக்கு ஆதரவாக மாறும் என்று பாஜக நினைத்தது. ஆனால் அவை எவ்வளவு தவறானவை என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துவிட்டன.

கெஜ்ரிவால் ஆறு ஆண்டுகால மோடி ஆட்சிக்கு எதிராக மட்டுமல்லாமல், பாஜகவின் தீவிர தேசியவாத பிரசாரத்தையும் எதிர்த்துப் போராடியதால் ஆம் ஆத்மி கட்சி தனது எண்ணிக்கையை 63 இடங்களுக்கு உயர்த்தியது . மேலும் காங்கிரசின் எண்ணிக்கை கடுமையாக இந்தத் தேர்தலில் சரிந்தது. அது 67 சட்டசபைத் தொகுதியில் அதன் வைப்புத்தொகையை இழந்தது. மேலும், பலர் இது ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையிலான மறைமுகமான கூட்டணி என்று நம்புகிறார்கள். காங்கிரஸின் மூத்த எம்.பி., கே.டி.எஸ் துளசி கூட, இதுபோன்ற ஒரு கருத்தைக் கூறினார். வாக்களிக்கும் நாளுக்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக பிரியங்கா அல்லது ராகுல் காந்தியை காங்கிரஸ் பிரச்சாரத்துக்கு அனுப்பாததால் இந்த எண்ணம் வலுப்படுத்தப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சி அல்லது பாஜகவை விட கட்சி வளர்ச்சிப் பணிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் இன்னும் அதிகம் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனென்றால், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. டெல்லி தேர்தல்களிலிருந்து அவர்கள் விலகியிருந்தார்கள் என்று காங்கிரஸ் தலைமை பற்றி கூற என்ன காரணமென்றால், இது ஆம் ஆத்மிக்கு ஒரு நகராட்சித் தேர்தல் போன்றது என்று அவர்கள் கருதினார்கள். உண்மை என்னவென்றால், காங்கிரஸ் தீவிரமாகப் போராடியிருந்தால், பாஜக ஒரு பெரிய பயனாளியாக இருந்திருக்கும். ஆம் ஆத்மி ஓட்டுக்களைக் காங்கிரஸ் கைப்பற்றியதால் பாஜக சில இடங்களில் வென்றது. வேறு விதமாக சொல்லவேண்டுமானால், அதிக இடங்களை வெல்ல உதவிய காங்கிரசுக்கு ஆம் ஆத்மி நன்றியுடன் இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறிய பின்னர், தலைநகரில் கலவரம் ஏற்பட்ட சூழ்நிலையில் டெல்லி தேர்தல்கள் நடந்தன என்பது சுவாரஸ்யமானது. டிசம்பர் 15ஆம் தேதி, சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முறியடிக்கும் முயற்சியில் டெல்லி காவல் துறை ஜாமியா மில்லியா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து, மாணவர்களை இரக்கமின்றி தாக்கியது. மாணவர்களின் போராட்டத்திற்கு அரசின் வன்முறையான பதிலடி தேவையற்றது.

அது மட்டுமல்லாமல், அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் பிற வளாகங்கள், நகரங்களில் மாணவர் போராட்டங்களை மிருகத்தனமாக அடக்கியது. ஜாமியா சம்பவத்திற்குப் பிறகுதான், ஷாஹீன் பாக் பெண்கள் அருகிலுள்ள பூங்காவில் உட்கார்ந்து போராட முடிவுசெய்தனர். இந்தப் பெண்கள் இந்திய அரசியலமைப்பால் சத்தியம் செய்து, அதன் முன்னுரையை வழக்கமாக வாசிப்பார்கள்.

ஷாஹீன் பாக் போராட்டம் நாடு முழுவதும் பரவியதால் மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக இருந்தனர். எல்லா இடங்களிலும் அவர்கள் மாநிலத்தின் அடக்குமுறையை எதிர்கொண்டனர். அப்போது ஒரு செய்தி நிறுவனம் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், 20 விழுக்காட்டிற்கும் அதிகமான இளைஞர்கள் பாஜகவிலிருந்து விலகியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இந்த மாற்றம்தான் பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

டெல்லியில் பல இளைஞர்கள் ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கக்கூடாது என்று பொதுமக்களோடு சண்டையிட்ட சம்பவங்கள் இருந்தன. அவர்களில் சிலர், பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நினைத்த பெற்றோரை வீட்டில் பூட்டிவைத்த வினோதமான சம்பவம் கூட நடந்தது

டெல்லி தேர்தல்கள் தலைநகரில் உருவாகியுள்ள ஆழமான பிளவுகளைத் தெரிவிக்கின்றன. பாஜகவை எதிர்க்கும் சிறுபான்மையினர் மட்டுமல்ல, மதச்சார்பற்ற கல்வியால் பலனைப் பெற்ற இளைஞர்களும் நாட்டில் மத பாசிசம் வளர்ந்தால் தாங்கள் எதை இழக்க நேரிடும் என்பதையும் உணர்ந்துள்ளனர். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வெறுப்புணர்வு வளர இதுவே காரணம்.

தேசிய பாதுகாப்புப் பிரச்னைகள், தீவிர மதப் பிரசாரம் ஆகியவை மாநில தேர்தல்களில் அவர்களுக்கு உதவுகின்றனவா இல்லையா என்பதை பாஜக தலைமை ஆராய வேண்டும்.

இதையும் படிங்க:டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா ராஜினாமா

ABOUT THE AUTHOR

...view details