கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பட்டவர்கள் தங்களால் முடிந்தளவு நிதி பங்களிப்பை அளித்துவருகின்றனர்.
அந்தவகையில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் பணியாளர்கள் 20 கோடி ரூபாயை பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், "எங்கள் பணியாளர்கள் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைக்கு முதல்கட்ட பங்களிப்புக்காக 20 கோடி ரூபாயை பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:800 குடும்பங்களுக்கு தோள்கொடுத்த தொழிலதிபர்... செயல் பேசும் மனிதநேயம்!